தமிழகம்

சென்னை, கோவையில் சிபிஐ சோதனை

செய்திப்பிரிவு

வங்கியில் ரூ.65 கோடி மோசடி செய்தது தொடர்பாக சென்னை, கோவை உட்பட 5 இடங்களில் உள்ள நகைக்கடைகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

கோவையைச் சேர்ந்த பிரபல நகை தயாரிப்பு மற்றும் விற் பனை நிறுவனம், அங்கு உள்ள வங்கி ஒன்றில் ரூ.65 கோடி பெற்று மோசடி செய்ததாக சம் பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கடந்த 2013-ல் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த பாலாஜி, அசோக் குமார், நாகேந்திரன், மனோகரன் ஆகிய 4 பேர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், கோவை தெலுங்குபாளையம் பாரதி சாலையில் உள்ள நகைக்கடை, கிராஸ்கட் ரோடில் உள்ள மேலும் ஒரு நகைக்கடை, ராஜ வீதியில் உள்ள நகைக்கடை உட்பட 4 இடங்களிலும், சென்னை சவு கார்பேட்டையில் உள்ள நகைக் கடை ஒன்றிலும் சிபிஐ அதிகாரி கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT