தமிழகம்

சட்டப்பேரவை செயலராக பூபதி நியமனம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலராக இருந்த பூபதி தற்போது சட்டப்பேரவை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை செயலராக ஜமாலுதீன் பணியாற்றி வந்தார். பணி மூப்பு காரணமாக 2012-ம் ஆண்டு ஜமாலுதீன் ஓய்வு பெற்றார். அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா ஜமாலுதீனுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார்.

அந்த வகையில், இன்றுடன் ஜமாலுதீனின் பணி நீட்டிப்பு பதவிக்காலம் முடிவடைந்தது. சட்டப்பேரவை செயலராக இருந்த ஜமாலுதீனின் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை தொடர்ந்து, பேரவைச் செயலக கூடுதல் செயலர் பூபதி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜமாலுதீனுக்கு அடுத்த நிலையில் உள்ள கூடுதல் செயலாளர் க.பூபதியை, சட்டப்பேரவை செயலர் ஆக நியமித்து பேரவைத்தலைவர் பி.தனபால் இன்று உத்தரவிட்டார்.இதையடுத்து. க.பூபதி பேரவைத் தலைவர் பி.தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, அவர் பேரவை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை இப்பணியில் நீடிப்பார்.

          
SCROLL FOR NEXT