தமிழகம்

பெரம்பலூர் | ஆசிரியர் மீது பாலியல் புகார் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 250-க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சைல்ட் லைனின் 1098 என்ற எண்ணுக்கு அண்மையில் புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து தகவல் பரவியதால், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக குன்னம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT