தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். ஆனால் இதன் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அந்தமான் பகுதியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும். இது தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை தொடர்பாக முன்னெச் சரிக்கை ஏதும் இல்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை தொடர்பாக முன்னெச் சரிக்கை ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நாளையுடன் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிறைவடைய உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நகரங் களில் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் நேற்று 13 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, திருத்தணியில் 108.68, சென்னையில் 105.62, பரங்கிப்பேட்டை, கரூர் பரமத்தி யில் 104, கடலூரில் 103.64, வேலூரில் 103.1, மதுரை மற்றும் புதுச்சேரி யில் 102.92, தூத்துக்குடியில் 102.02, நாகப்பட்டினத்தில் 101.3, பாளையங்கோட்டையில் 101.12, காரைக்காலில் 100.4, தொண்டியில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.