தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் 
தமிழகம்

ஈரோடு கிழக்கில் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் இன்று (பிப்.21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பரிசுப் பொருட்கள் தொடர்பாக நேற்று (பிப்.20) 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி வரும் புகார்கள் மீது பறக்கும் படையினர் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள் வந்துள்ளது. 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 340 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று (பிப்.21) காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT