தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் சென்னை மண்டல முதன்மை ஆணையர் சலில் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995-ன்கீழ் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசிடம் இருந்து மானி யம் பெறுகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றிட, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உறுப் பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் வருங் கால வைப்புநிதி அலுவலகத்தில் நடந்து வரும் முகாமுக்கு சென்று தங்களது ஆதார் எண், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமாண பத்திரம்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை டிஜிட்டல் உயிர்வாழ் சான்றி தழை வங்கியில் சமர்ப்பித்த, சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கோ அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்துக்கோ சென்று ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு அட்டை, பிபிஓ எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதுவரை டிஜிட்டல் உயிர்வாழ் சான் றிதழ் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்கள், உடனே சமர்ப்பிக்க வேண்டும். அப்படி பதிவு செய்யாத ஓய் வூதியதாரர்களுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது.