தமிழகம்

சத்யபாமா பல்கலையில் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச கல்வி

செய்திப்பிரிவு

சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் எபிலிட்டி அறக்கட்டளை இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

படிப்பில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறன் மாணவர்கள் 50 பேரை தேர்வுசெய்து அவர்கள் இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிக்கவும், பி.காம்., எம்பிஏ படிக்கவும் முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டண செலவுகளும் அடங்கும். இதற் கான விண்ணப்பத்தை www.ability foundation.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் எபிலிட்டி அறக்கட்டளைக்கு மே 19-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறன் மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான கல்விச்சூழல் ஏற்படுத்தி தரப்படும். கூடுதல் விவரங்களை எபிலிட்டி அறக்கட்டளையின் இணைய தளத்தில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT