ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்யப்படுகிறது.
அதன்படி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 51 லட்சத்து 31 ஆயிரத்து 590 ரூபாய், ரூ.7.36 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், ரூ.1.33 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.