கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்துக்கு மதியழகன் எம்எல்ஏ ஆறுதல் கூறி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். 
தமிழகம்

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ நேற்று பிரபுவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் பிரபாகரன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் , நாகரசம்பட்டி பேரூராட்சித்தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT