தமிழகம்

மோடி தலைமையிலான அரசின் கீழ் நாடு பெரும் சாதனைகளை படைத்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாட்டால் நாடு பெரும் சாதனைகளை புரிந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமராக 3 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் இந்தியா பெரும் சாதனைகளை செய்து வருகிறது.

தமிழக அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் நீண்ட நாட்களுக்கு நல்ல ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் உங்களுக்கு வழங்கவும், நாட்டிற்கும் மக்களுக்கும் நீங்கள் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

SCROLL FOR NEXT