தமிழகம்

ரூ.34 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சார்ஜாவில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள 10 தங்கக் கட்டிகளை கடத்தி வந்தவர் பிடிபட்டார்.

சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு தங்கம் கடத் தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாலை 4 மணியள வில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானப் பயணிக ளிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஒரு பயணியின் உடலில் 1.160 கிலோ எடையுள்ள 10 தங் கக் கட்டிகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப் பட்டது. விசாரணையில், சென்னை அருகே உள்ள மாதவரத்தைச் சேர்ந்த சரவணன்(28) என்பதும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT