மாற்று மணலை பயன்படுத்து வதன் அவசியத்தை வலி யுறுத்தி ‘தி இந்து’ தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆற்று மணலுக்கு மாற்றாக, எம்.சாண்டு எனப்படும் மாற்று மணலை பயன்படுத்து வது அவசியம் என்று, மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார்.
கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் ‘எம்.சாண்டு’தான் மாற்று மணல் எனப்படுகிறது. இம் மாற்று மணல் துகள்கள் அனைத்தும் சரியான அளவில் ஒரே சீராக இருப்பதால் அதிக வலிமையான கான்கிரீட் அமைய பயன்படுத்துகின்றனர். பல்வேறு அரசுப் பணிகளுக்கும் இந்த மாற்று மணல் இப்போது உபயோகிக்கப்பட்டு வருகிறது. பெங்களூர் விமான விரிவாக்கப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் போன்றவற்றுக்கு இந்த மணலைப் பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள்.
இந்த மாற்று மணலானது கட்டுமானத் துறையின் தரக் கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ தரத்தில் இருப்பதாகவும், தரத் தில் ஆற்று மணலைவிட இவை மிகச் சரியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டிட மான துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஜா, இதைக் கொண்டு கட்டப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. இது, ஆற்று மணலை விட 30 முதல் 40% வரை விலை குறைவாகக் கிடைக்கிறது.