தமிழகம்

திருநின்றவூர் அருகே அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையை மக்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

திருநின்றவூர் அருகே புதிய டாஸ் மாக் மதுபானக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை கள் அமைப்பதற்கு எதிராக பல் வேறு போராட்டங்கள் நடந்து வரு கின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் அருகே திருநின்றவூர் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப் பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை, திருநின்றவூர் அருகே நத்தம்மேடு பகுதியில் அமைக்கும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அந்தப் பணி, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நடப்பதை அறிந்த நத்தம்மேடு பகுதி மக்கள், தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை செயல் பட்டால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு இடையூறு களுக்கு உள்ளாவர் எனக் கூறி, புதிய டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், புதிய டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடப்பதை அறிந்த நத்தம்மேடு பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் கடை அமைக்கும் நடக்கும் கட்டிடத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடம் விரைந்த திருநின்றவூர் போலீ ஸார், புதிய டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படாமல் இருக்க, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT