தமிழகம்

தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000 கோடி வருவாய்: விக்கிரமராஜா

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள வடமாநில தொழிலா ளர்கள் மாதாமாதம் ரூ.18,000 கோடி எடுத்துச் செல்கின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிர மராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்விருத்தாசலம் தனியார் திருமணமண்டபத்தில் நேற்று நடை பெற்றது. அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர்விக்கிரமராஜா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

வருகின்ற மே 5-ம் தேதி வணிகர்களுக்கான மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கடுமையாக கட்டுப்படுத்த வேண் டும். ஆன்லைன் வர்த்தகம், பெரியநிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், சாமானிய வணிகர்களை துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது. அவர்களை காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வேலை செய்ய முன்வர வேண்டும். வேலை இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளாமல், வேலை வாய்ப்புத்தேடி வர வேண்டும். வேலை தருவதற்கு வணிகர்கள் தயாராக இருக்கிறோம். குறிப் பாக, தமிழகத்தில் உள்ள வட மாநில இளைஞர்கள் இங்கு பணியாற்றுவதன் மூலம் மாதாமாதம் ரூ.18,000 கோடி வருவாய் வடமாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான் வணிகம் மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழ கத்தைச் சேர்ந்தவர்கள் மதுபானம், கஞ்சாவிற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள். சொத்து வரி, வணிக வரி, மின்சார கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT