சந்திர சேகர் ராவ் மற்றும் மு க ஸ்டாலின் 
தமிழகம்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: நீண்ட ஆயுடளுடன் பிரிவினை அரசியலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவிற்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் தெலங்கானா மாநில மக்களுக்காகப் பணியாற்றவும், பிரிவினை அரசியலை எதிர்த்துப் போராடவும் விழைகிறேன்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT