தமிழகம்

தி.மலை ஏடிஎம் கொள்ளை எதிரொலி: வங்கி மேலாளர்களுடன் எஸ்பி ஆலோசனை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: திருவண்ணாமலையில் ஏடிஎம் இயந்திரங்கள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதன் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்கி மேலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஏ.டி.எம்.மையங்களில் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட கருத்துகளை சுதாகர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம், சந்திர சேகர், பால குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஜூலியஸ் சீசர், சுனில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT