ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் புதுக்கோட்டையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகளை யும் தமிழ் நாடு கனிம நிறுவனத் தின் கீழ் கொண்டுவந்து அரசே நடத்த வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, விவசாயிகள் மரணிப்பது என்பது ஒரு தேசம், ஒரு சமூகம் சந்திக்கும் அபாயத்தின் அறிகுறி. அதை புறந்தள்ளிவிட்டுச் செல்ல முடியாது என்றார்.