தமிழகம்

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக் காக ஆன்லைனில் பதிவு செய்யும் தேதி இன்றுடன் முடிகிறது.

தமிழகத்தில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரி களில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக் கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் பதிவு தொடங்கிய முதல் நாளில் மட்டும் 4,786 பேர் பதிவு செய்தனர்.

ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதியாக மே 31 நிர்ணயம் செய்யப் பட்டது. இதையடுத்து ஆன்லைன் பதிவு இன்றுடன் முடிகிறது. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT