தமிழகம்

எலியட்ஸ் கடற்கரை வெற்றியை தொடர்ந்து மெரினா கடற்கரையில் ‘தி இந்து’ குழுமம் சார்பில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா: நாளை தொடக்கம்; பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

செய்திப்பிரிவு

‘தி இந்து’ குழுமம் சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை யில் நடத்தப்பட்டு வந்த ‘கார்கள் இல்லாத ஞாயிறு விழா’ வெற்றி யைத் தொடர்ந்து, அவ்விழா மெரினா கடற்கரையில் நாளை தொடங்குகிறது.

மாநகரப் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் பொது இடங்கள் குறைந்துவிட்டன. அதனால் பொது இடம் ஒன்றை உருவாக்கும் விதமாக, ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற கருப்பொருளுடன், தி இந்து நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த அக்டோபர் 2015-ல் சென்னையில் முதன்முறையாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா தொடங்கப்பட்டது.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வரும் அந்த விழாவில், சாலையில் மோட்டார் வாகன போக்குவரத் துக்கு தடை விதிக்கப்படும். அந்த சாலையில் காலை 6 மணி முதல் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற்பயிற்சி அளிக்கும் ஜூம்பா, டிரம்ஸ் இசைக் கருவி இசைக்கும் பயிற்சி, கயிறு இழுக்கும் போட்டி, குழந்தைகளுக்கு கோட்டோவியங்களை சாலையில் வரையும் பயிற்சி, பாம்பு- ஏணி விளையாட்டு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் வாரந்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘தி இந்து’ குழுமம் மற்றும் மயிலாப்பூர் காவல் சரகம் ஆகியவை சார்பில், மெரினா கடற்கரையில், நேதாஜி சிலை மற்றும் காமராஜர் சிலை இடையே ‘கார்கள் இல்லாத ஞாயிறு விழா’ நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இங்கு, மேற்கூறிய நிகழ்ச்சிகள் மற்றும் தி இந்து நாளிதழ்களை படிக்கும் பகுதி, ‘தி இந்து’ குழும இதழ்களில் வெளியான கேலி சித்திரங்கள், இதய நோயா ளிகளுக்கு அளிக்கக்கூடிய முத லுதவிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.

யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற்பயிற்சி அளிக்கும் ஜூம்பா, டிரம்ஸ் இசைக் கருவி இசைக்கும் பயிற்சி, கோட்டோவியங்களை சாலையில் வரையும் பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT