தமிழகம்

தமிழக காவல் துறை மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தி.நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை, நகை கொள்ளை எனப் பெரிய அளவில்குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறைகைகள் கட்டப்பட்டு, செயலிழந்துகிடக்கிறது. தமிழக முதல்வர் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பதற்கு இச்சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT