தமிழகம்

திமுக மருத்துவ அணிக்கு சின்னம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, அணித்தலைவர் கனிமொழி என்விஎன்.சோமு எம்.பி. இணைச் செயலாளர் அ.சுபேர்கான் ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.

அப்போது, மருத்துவ அணியின்மாவட்டம் மற்றும் தொகுதிப்பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் முதல்கட்டப் பட்டியல், மருத்துவ அணிக்காக நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஆகியவற்றை ஸ்டாலினிடம் அவர்கள் வழங்கினர்.

இதையடுத்து, மருத்துவ அணிக்கான சின்னத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மருத்துவ அணி சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுமாறு முதல்வர் மருத்துவ அணி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT