தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆவணங்கள் இல்லாத ரூ.4.37 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத, ரூ.4.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் எடுத்து வரப்பட்ட ரூ.63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 20-ம் தேதி முதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.44.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT