ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நேற்று நிறைவடைந்தன.
திருவள்ளூர் வீரராகவபெரு மாள் கோயிலுக்கு சொந்தமான அரங்கில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஸ்ரீ ராமானுஜர் தத்துவத்தை பொதுமக்கள் மத்தி யில் எடுத்துச் செல்லும் வகையில் இசை, நாட்டியம், சொற்பொழிவு, உபன்யாசம், விவாத மேடை, கலந் துரையாடல் என ‘தர்சனோதயா’ நிகழ்வாக நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நேற்று நிறை வடைந்தன.
இதில்,திருவள்ளூர், சென்னை பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று காலை, ‘உடையார் வைப வம்’ என்ற தலைப்பில், சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீசுப்ரபக்த சபாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் கதாகாலட்சேபம் செய்தனர்.
திருவள்ளூர் ஸ்ரீஆர்.எம்.ஜெயின் வித்யாசரமம் சீனியர் செகண்ட்ரி பள்ளி மாணவிகள் ஸ்ரீ ராமானு ஜரின் வாழ்க்கை மற்றும் தத்து வத்தை எடுத்துரைக்கும் வகையில் பஜன் மற்றும் நாட்டிய நிகழ்ச்சி களை வழங்கினர். அனந்தபத்மநா பாசார்யார் தலைமையில் விவாத மேடை நடந்தது.