தமிழகம்

வடமாநிலத்தவரை கண்காணிக்க விஜயகாந்த் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்களை காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி வாழவும் காவல் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT