குரூப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணை யர், மாவட்டப் பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலிப்பணியிடங் களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 29 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் 2,926 பேர் கலந்துகொண்டனர்.
தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக் கீட்டு விதி அடிப்படையில் சான் றிதழ் சரிபார்ப்புக்கு 148 பேர் தற்காலிகமாக தெரிவுசெய்யப் பட்டுள்ளனர். அவர்களின் பதி வெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.