வறட்சி நிவாரணம், குடிநீர் திட்டப்பணிகள், குடிமராமத்து தொடர்பாக 7 மாவட்ட ஆட்சியர் களுடன் முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஏரி, குளம், கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும் மத்திய, வட மாவட்டங்கள் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட் டது. வறட்சி பாதிப்பை குறைக்கும் வகையில் நிவாரணம், குடிநீர் வசதி உள்ளிட்டவை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமை செய லகத்தில் இருந்தபடியே முதல்வர் கே.பழனிசாமி வறட்சி நிவாரணப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் வறட்சி நிவாரணம், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர்களிடம் முதல் வர் அறிவுறுத்தியதாவது:
இடுபொருள் மானியம் வழங் காமல் விட்டுப்போன விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண் டும். பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதற்கான நட வடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு சிரமமின்றி குடிநீர் வழங்க அனைத்து நட வடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண் டும். குடிமராமத்துப் பணிகளை துரிதப்படுத்தி ஏரி குளங்களின் கொள்ளளவை வரும் மழைக்காலத் துக்குள் அதிகரித்து நீரை தேக்க வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. கருப்பணன், தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் க.சண்முகம் (நிதி), ஹன்ஸ்ராஜ் வர்மா (ஊரக வளர்ச்சி), ஹர்மந்தர் சிங் (நகராட்சி நிர்வாகம்), எஸ்.கே.பிரபாகர் (பொதுப்பணி), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை), பி.சந்திரமோகன் (வருவாய்) மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.