தமிழகம்

தேனி | பிச்சை எடுத்து சாலையை சீரமைக்க நிதி திரட்டியவரை எச்சரித்த போலீஸார்

செய்திப்பிரிவு

தேனி: தேனி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் கேரள புத்திரன். சமூக ஆர்வலர். இவர் ஆதிபட்டி - பூதிப்புரம் இடையே உள்ள 3.5 கி.மீ. சாலையைச் சீரமைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது சாலை சீரமைப்புக்கு நிதி திரட்டும் வகையில், திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மனு கொடுக்கச் சென்றவரை போலீஸார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

இது குறித்து கேரளபுத்திரன் கூறுகையில், சிதிலமடைந்த இச்சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் சரி செய்யவில்லை. ஆகவே, பிச்சை எடுத்து நிதி அளிக்க முயன்றேன். போலீஸார் அனுமதிக்கவில்லை. இருப்பினும், கிடைத்த பணத்தை மக்கள் பங்களிப்பாக அரசுக்கு அனுப்புவேன் என்றார்.

SCROLL FOR NEXT