பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை: பழைய குற்றவாளிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய குற்றவாளிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில், காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் மற்றும் அரசியல் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 200 பழைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், ஆயுதங்கள் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து போலீஸார் கூறியதாவது: ஃப்ந்மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 10 பேர் ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் நன்னடத்தைவிதிமுறைகளின் படி கோட்டாட்சியர் முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் நன்னடத்தையை மீறினால் உடனடியாக சிறையில் அடைக்கப்படு வார்கள் எனவும், மீதமுள்ள 40 பேர் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்பதால், அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

SCROLL FOR NEXT