சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மே, ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொலைதூரக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான (இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் தேர்வுகளுக்கு) ஆன்லைனில் (www.ideunom.ac.in) அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.