தமிழகம்

தமிழக ஆட்சியாளர்கள் தடம் புரண்டுவிட்டனர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழக ஆட்சியாளர்கள் இலக் கில் இருந்து தடம் புரண்டு விட்டனர் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்துவ தற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராஜ பாளையம் வந்தார். அவரது குடும்பத்தினரிடம் இரங்கல் தெரி வித்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவின் இரு அணிகளின் பேச்சுவார்த்தை நல்ல நிலையில் உள்ளது. தோப்பு வெங்கடாசலம் மட்டுமின்றி சட்டப்பேரவை உறுப் பினர்கள் பெரும்பாலானோர் கலக்கத்தில் உள்ளனர்.

எங்களின் அடிப்படை கொள்கை எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா கொள்கையாகவும், இயக் கம் தொண்டர்களின் இயக்க மாகவும், கட்சி மக்களாட்சி தத் துவத்தின்படியும் இருக்க வேண் டும். இந்த கொள்கைக்காகவே தர்ம யுத்தம் தொடங்கப்பட்டது. மக்கள் ஆதரவோடு இந்த யுத்தம் வெற்றியடையும்.

கடந்த 6 ஆண்டுகளாக தாய் மார்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு தரும் ஆட்சி இருந்தது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. மாநில வருவாயில் 48 சதவீதம் சமூகநலத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அடித் தட்டு மக்களின் பொருளா தார முன்னேற்றத்துக்காக பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. தற்போதைய ஆட்சியாளர்கள் அந்த இலக்கில் இருந்து தடம் புரண்டுவிட்டனர் என்றார்.

SCROLL FOR NEXT