தமிழகம்

சைதை தொகுதியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை: மா.சுப்பிரமணியன் வழங்கினார்

செய்திப்பிரிவு

சைதாப்பேட்டை தொகுதிக்கு உட் பட்ட அரசு, மாநகராட்சிப் பள்ளி களில் படித்து பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1000-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா, திமுக சார்பில் சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் மேய ரும், தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், 161 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டினார்.

மாணவ, மாணவிகளுக் கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில், கல்வித்துறை வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT