சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை நிவேதா (45) கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த நிவேதா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவருக்கும் தீய ணைப்புப் படை வீரர் இளைய ராஜாவுக்கும் பழக்கம் இருந்துள் ளது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் கணபதி(33) என்பவருடன் முகநூல் மூலம் நிவேதா பழகியுள்ளார்.
நேற்று தனது மகள் படிப்பு தொடர்பாக இளையராஜாவுடன் கோவையிலிருந்து சென்னை வந்த நிவேதா சென்னை நண்பர் கணபதியுடன் அண்ணாநகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த இளையராஜா ஆத்திரத்தில் பைக் மீது காரை ஏற்றினார். இதில் படுகாயமடைந்த நிவேதா கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை யில் நேற்று இரவு உயிரிழந் தார். காயமடைந்த கணபதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீயணைப்புப் படை வீரர் இளையராஜாவை கைது செய்தனர்.