தமிழகம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கேன் குடிநீர் நிறுவனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செய்திப்பிரிவு

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூரில் உள்ள தனியார் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி யுள்ளன. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து (பிஐஎஸ்) உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் காரணத்தால் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல் பட்டு வந்த 33 குடிநீர் நிறுவனங் களை மூட அரசு உத்தர விட்டது.

மேலும், சோழவரம் பகுதியில் இயங்கி வரும் குடிநீர் நிறுவனங் களை மூடுமாறு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று மாலை முதல் கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

சங்க தலைவர் விளக்கம்

இதுகுறித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் ஏ.ஷேக்ஸ் பியர் கூறியதாவது:

நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக கூறி ஏற்கெனவே 33 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள நிறுவனங்களையும் மூடினால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சுகாதாரமற்ற முறையில் ஆர்.ஓ அமைத்து உரிமமில்லாமல் அதிக விலைக்கு குடிநீரை விற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கேன் குடிநீர் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதுடன், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே, ஏற்கெனவே இருக் கும் நிறுவனங்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

மேலும், கேன் குடிநீருக்கு ஜிஎஸ்டி-ல் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கேன் குடிநீரின் விலை அதிகரிக்கும். எனவே, ஜிஎஸ்டி-ல் இருந்து கேன் குடிநீருக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்,

SCROLL FOR NEXT