தமிழகம்

தமிழகத்தில் ஜூன் 5 முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: உள்ளாட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜூன் 5 முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில், 40 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான பாலித் தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த, ஏற் கெனவே தடை உள்ளது. ஆனால், தடையை மீறி விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. கடைகளில், 40 மைக்ரானுக்கும் குறைவான, பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டால் அவை பறி முதல் செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில், 2006-ம் ஆண்டு பிளாஸ்டிக் மேலாண்மை திட்ட சட்டம் இயற்றப்பட்டது. இதனை, மாநில அரசுக்கு ஏற்ற வகையில் விதிகளை இயற்றி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து வரும் ஜூன் முதல் 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை

இதேபோல் 2006-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாகவும் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டப்படி உணவகங்கள், விடுதிகள், வணிக நிறுவனங் கள், சாலையோர கடைகள் மற்றும் குடியிருப்பு போன்றவற்றில் சேகரிக்கும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.

குப்பையை தரம் பிரித்து வழங்கினால் மறுசுழற்சி செய்யலாம், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. எனவே, ஜூன் 5 முதல் சாலையில் குப்பை கொட்டுபவர்கள், தரம் பிரிக்காதவர்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துாய்மை காவலர்கள் கண்காணித்து, அபராதம் விதிப்பார்கள்.

இதுகுறித்து உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக்கால் ஆன கவர்கள், கேரிபேக்குகள், டம்ளர்கள், கப்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

50 மைக்ரான் தடிமன் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது. மறுசுழற்சி செய்ய முடியாது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஜூன் 5ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2006-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உணவகங் கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் மற்றும் குடியிருப்பு போன்ற இடங்களில் சேகரமாகும் குப்பையை அகற்றுவது அவரவர் பொறுப்பு.

எனவே அந்த குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் ஒவ்வொரு நாளும் அபாரதம் விதிக்கப்படும். குப்பை சேகரிக்கவும் கட்ட ணம் வசூலிக்கப்படும். கட்ட தவறினாலும் அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT