தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விதிவிலக்கு: கனிமொழி எம்.பி. உறுதி

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வுக்கு விதிவிலக்கு குறித்த கருத்தரங்கம் திமுக சார்பில் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் தற்போதுள்ள மாநில அரசுடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் தமிழ் மொழி நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.

மத்திய அரசு தமிழக மாணவர்களிடம் இந்தியை திணிப்பது நாகரிமற்ற செயல். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் உடனடியாக விலக்கு அளிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எல்.மூக்கையா, ராமகிருஷ்ணன், லெட்சுமணன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT