தமிழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவகத்தில் அருங்காட்சியகம்

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து இதற்கான ஒப்புதலை பெற மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பியது. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாநில கடலோர மண்டல மேலாண்மைக் குழுவுக்கு கருத்துரு பரிந்துரைக்கப்பட்டது. திட்டம் தொடர்பாக மாநில கடலோர மண்டல மேலாண்மைக் குழுவின் வல்லுநர் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அருங்காட்சியக திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT