தமிழகம்

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெடிபொருள் வெடித்து 7 வயது சிறுமி கை துண்டானது

செய்திப்பிரிவு

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெடிபொருள் வெடித்து 7 வயது சிறுமியின் இடது கை துண்டானது.

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள அத்திப்பட்டைச் சேர்ந்தவர் அனிஷா(10), இவரது தோழி வர்சா(7). பள்ளி மாணவிகள். இருவரும் நேற்று காலை அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு கிடந்த பேட்டரி போன்ற பொருள் ஒன்றை எடுத்தபோது அது வெடித்து சிதறியது. இதில், வர்சாவின் இடது கை துண்டானது. அனிஷாவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடித்தது பேட்டரியா? அல்லது வெடிபொருளா? என அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT