தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் நேற்று கூறியதாவது:
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் 21 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டங்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஓஎன்ஜிசி சார்பில் கடந்த 6-ம் தேதி கூறியுள்ளனர். இது உண்மைக்குப் புறம்பானது.
எனவே, தமிழக அரசு இதற்கு அனுமதியளிக்கக் கூடாது. அனுமதி அளித்திருந்தால் அதனை திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து, தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.