அம்பத்தூரில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரம், வெள்ளி பொருட் களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
அம்பத்தூர், தலைமைச் செயலக காலனி, பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி. குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.
இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு கோடை விடுமுறையைக் கொண்டாட மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். நேற்று காலை அவரது வீட்டை சுத்தம் செய்யும் லதா என்பவர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை மற்றும் வைரம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

மேலும் வெள்ளி குடம், வெள்ளி சாமி சிலையையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து அம்பத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை ஆணையர் சுதாகர் மேற்பார்வையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் கந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
கைரேகை நிபுணர்களும் சந்திர னின் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்துச் சென்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப் பட்டது. கொள்ளை போன நகை 100 பவுன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.