சென்னை ராமகிருஷ்ண மடம் மற் றும் சமூக சேவை செய்யும் நிறு வனங்களை மேம்படுத்துவதற்கான அமைப்பு (என்டிஎஸ்ஓ) சார்பில் சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்தநாளை ஒட்டி, சமூக சேவை யில் ஈடுபட்டு வரும் பெண்கள் பங் கேற்ற, அவர்கள் செய்யும் சேவையை மேம்படுத்திக்கொள் வதற்கான பயிற்சி ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, மதுப் பழக்கத்திலிருந்து மீட்பது, இயற்கை வேளாண்மை, பள்ளி மாணவர்களுக்கு இலவச தனிவகுப்பு நடத்துவது, பழங்குடி யின குழந்தைகள் மேம்பாடு உள் ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் சிறிய அளவில் தங்களை ஈடுபடுத் திக்கொண்டுள்ள 150 பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், ராமகிருஷ்ண மடம் சார்பில் தயாரிக்கப்பட்ட, பயிற்சியில் பங்கேற்ற பெண் களின் சேவைகள் மற்றும் சிறப்பு கள் அடங்கிய “பெண்கள் தலைமை யில் தேசிய சேவை” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற் றது. ராமகிருஷ்ண மடத்தின் தலை வர் கவுதமானந்த சுவாமிஜி வெளி யிட, என்டிஎஸ்ஓ தலைவர் அழகர் ராமாநுஜம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலா மின் உதவியாளர் பொன்ராஜ், நரம் பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் கனகா, சமூக சேவகி ரேவதி, எண் ணங்களின் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.