தென்காசி: தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியைச் சேர்ந்தவர் மணிச்சாமி(30). இவர், அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பன்றிகள் மணிச்சாமியை தாக்கியுள்ளன. தப்பி ஓட முயன்றும் பன்றிகள் துரத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் மணிச்சாமியை மீட்டு ஆய்க்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பன்றிகள் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.