புதிய ஆட்சியர் ஜெயசீலன் | கோப்புப் படம் 
தமிழகம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பேற்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் 24-வது மாவட்ட ஆட்சியராக முனைவர் வீ.ப.ஜெயசீலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பணியாற்றிய முனைவர் வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முறைப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 2014-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்வானாவர். விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கி, செங்கல்பட்டு சார் ஆட்சியர், வீட்டு வசதித் துறை துணைச் செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த இவர், மதுரை வேளாண்மை கல்லூரியில் வேளாண்மையில் இளநிலை பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், 'தமிழில் சிறை இலக்கியம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT