போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் குரோம்பேட்டையில் வரும் 2-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று அறி விப்புகளை வெளியிடவுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப் பட்டு வருகிறது. 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந் துள்ளது.
இதைத்தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி ஆகியவற்றை வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதைடுத்து, அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,000 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.250 கோடி என மொத்தம் ரூ.1,250 கோடியை 3 மாதங்களில் வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதால், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப் பட்டது.
ஊதிய ஒப்பந்தப் பேச்சு
பின்னர், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேற்றாத 34 கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க 12 பேர் கொண்ட துணைக் குழுவுடன், தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 27-ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக வரும் 2-ம் தேதி 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.