வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின்பேரில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன், கடந்த ஆண்டு மே மாதம் திடீரென தலைமறைவானார். மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மதன் மீது 123 பேர் புகார் கொடுத்தனர். மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய் திருப்பதாக புகார்களில் தெரிவிக் கப்பட்டிருந்தன.
திருப்பூரில், அவரது பெண் தோழி வர்ஷினி என்பவரின் வீட்டில் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை நவம்பர் மாதம் 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். மதன் அளித்த வாக்குமூலத்தை வைத்து எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவையும் போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மதனுக்கு ஜனவரி 25-ம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கடந்த 4 நாட் களாக மதனிடம், அமலாக் கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மதன் மற்றும் அவரது கூட் டாளிகள் சிலர் கோடிக் கணக்கான பணத்தை வெளிநாட் டில் பதுக்கி வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத் துள்ளன’’ என்றனர். நேற்று மதனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவில் அவரை கைது செய்தனர்.