சென்னையில் பள்ளி வாகனங் களில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து 5 இடங்களில் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை யில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது.
தமிழ்நாடு போக்கு வரத்து சிறப்பு விதிகள் 2012-ன் படி அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 16-ம் தேதி தண்டையார்பேட்டை வடக்கு கடற்கரை சாலை, 17-ம் தேதி நந்தனம் கலைக்கல்லூரி, 18-ம் தேதி கொளத்தூர் டிஆர்ஜி மருத்துவமனை எதிரிலும், 19-ம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி யிலும், 22-ம் தேதி சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளி வாகனங்களின் ஆய்வுகள் நடக்க உள்ளன. மொத்தம் 571 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற் கொள்ளப்படும். போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை உதவி ஆணையர், கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
எனவே, பள்ளி நிர்வாகத்தினர் தங்களது பள்ளியில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு மேற்கொள்ள மேற்கண்ட இடம் மற்றும் நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்த தவறும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.