தமிழகம்

தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சியில் பார்வையாளர் வருகை 5 லட்சத்தை கடந்தது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சியில் பார்வையாளார்களின் வருகை 5 லட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் 70 நாட்கள் நடைபெறும் 47-வது சுற்றுலா கண்காட்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை காணவும், பொழுபோக்கு விளையாட்டு மற்றும் நவீன கேளிக்கை சாதனங்களில் குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழிக்கவும் அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் மக்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுற்றுலா கண்காட்சிக்கு 29 ஆயிரத்து 36 பெரியவர்களும், 6 ஆயிரத்து 497 சிறுவர்களும் வருகை தந்தனர்.அதன்படி, 30 நாட்களில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 138 பேர் வருகை தந்துள்ளனர் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT