தமிழகம்

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: பெருங்குடி குப்பை கொட்​டும் வளாகத்​தில், பழைய குப்​பை அகற்​றப்​பட்டு 94 ஏக்​கர் நிலம் மீட்​கப்​பட்​டுள்​ளது. பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் 225 ஏக்​கர் நிலப்​பரப்​பில், குவிக்​கப்​பட்​டிருந்த சுமார் 29.28 லட்​சம் கனமீட்​டர் மரபுவழி (Legacy) கழி​வு​களை சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பயோ மைனிங் முறை​யில் அகற்றி நிலத்தை மீட்​டெடுக்​கும் பணி​கள் ரூ.350 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன.

மொத்​தம் உள்ள 6 சிப்​பங்​களில், சிப்​பம் 3, 4 மற்​றும் 5 ஆகிய​வற்​றில் பணி​கள் முழு​மை​யாக நிறைவு பெற்று 94 ஏக்​கர் நிலப்​பரப்பு மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது.

பெருங்​குடி​யில் நிறைவு செய்​யப்​பட்ட பயோ-மைனிங் திட்​டத்தை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார். இத்​திட்​டத்​தின் முதல் கட்​டத்​தில், பயோ-மைனிங் தொழில்​நுட்​பத்​தின் மூலம் 29,283.98 கனமீட்​டர் பழைய திடக்​கழி​வு​கள் அறி​வியல் முறை​யில் அகற்​றப்​பட்​டுள்​ளன.

பயோ-மைனிங் திட்​டத்​தின் மூலம் மீட்​கப்​பட்ட 94 ஏக்​கர் நிலப்​பரப்​பை​யும் ஆணை​யர் பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, பெருங்​குடி குப்​பைக்​கிடங்​கில் 2ம் கட்​ட​மாக ரூ.53.60 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் 5.50 லட்​சம் டன் பழைய திடக்​கழி​வு​களின் பயோ-மைனிங் பணி​களை ஆணை​யர் பார்​வை​யிட்​டு, இப்​பணி​களை திட்ட காலத்​துக்​குள் முடிக்க அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

மேலும், பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் மீட்​கப்​பட்ட 94 ஏக்​கர் நிலப்​பரப்​பின் ஒரு பகு​தி​யில் அமைக்​கப்​பட​வுள்ள 100 டன் திறன் கொண்ட உரமாக்​கும் நிலை​யத்​தின் கட்​டு​மானப் பணி​களை ஆய்வு செய்த ஆணை​யர், ​பணி​களை விரைந்து முடித்​து, ஜூன் 30-க்குள் செயல்​பாட்​டுக்கு கொண்டு வர அறி​வுறுத்​தி​னார்.

இந்த ஆய்​வின்​போது, இணை ஆணை​யர் (சு​கா​தா​ரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்​டார துணை ஆணை​யர் அஃதாப்ரசூல்​ ஆகியோர்​ உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT