தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி-யில் கோடை முகாம்: தமிழக அரசு ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை ஐஐடி சமூக கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் மையமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 3 நாள் கோடை முகாமை மே 17 முதல் 19 வரை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்துகிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பங்கு மற்றும் சமூக ரீதியான பிரச் சினைகளுக்கு பொருத்தமான தீர்வு காண உரிய விழிப்புணர்வை அளிப்பது இந்த முகாமின் நோக்கமாகும். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும்.

இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ள லாம். விருப்பமுள்ளவர்கள் www.csie.iitm.ac.in என்ற இணையதளத்தில் 12-ம் தேதிக் குள் (நாளை) பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ.900. கட்டணத்தை முதல் நாளில் நேரடியாக செலுத்தலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ஏதும் இல்லை.

முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சென்னை ஐஐடி சிஎஸ்ஐசி மூத்த திட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ராஜநாயகம் (செல்போன் எண் - 9840706401), தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத் தாக்க நிறுவன துணை இயக்கு நர் சிவசங்கர் (7550022121 ஆகியோரை தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT