தமிழகம்

வாட்ஸ் அப்பில் பரவும் மின் இணைப்பு துண்டிப்பு தகவல் தவறானது: தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின் கட்டணம் கட்டாத காரணத்தால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என்ற தகவல் தமிழகம் முழுவதும் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில், "உங்களின் கடந்த மாத மின் கட்டண தொகை அப்டேட் ஆகாத காரணத்தால், உங்களின் மின் இணைப்பு இன்று இரவு துண்டிக்கப்படும். இதற்கு உங்களின் மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களின் பில் தொடர்பான விவரங்கள் வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தவறான தகவல். எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT