அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் கூடுதலாக உள்ள பேராசிரி யர்கள், ஆசிரியரல்லாத பணி யாளர்களை இடமாற்றம் செய்யும் வரை பேராசிரியர்கள், பணியாளர் கள் நியமனத்தை நிறுத்தி வைக்கும் படி பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை அறி வுறுத்தி உள்ளது.
நிர்வாகச் சிக்கல் காரண மாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அங்கு பணியாற்றும் பேராசிரியர் கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.
இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், பணி யாளர்கள் எண்ணிக்கையை உயர்கல்வித் துறை ஆய்வு செய்தது. அப்போது, அனுமதிக்கப் பட்டதைவிட 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பணி யாளர்கள் இருப்பது கண் டறியப்பட்டது.
இதையடுத்து, இவர்களை வேறு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், கல்வி நிறுவனங் களுக்கு மாற்றும் பணியில் தற் போது தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இப்பணியிடங் களில் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர்களை நியமிக்க லாம் என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு 367 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். அதன் பின்னரும், ஆயிரத்து 80 பேராசிரியர்கள், 4 ஆயிரத்து 700 ஆசிரியரல்லாதோர் கூடுதலாக இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, இவர்களில் 547 பேராசிரியர்கள், ஆயிரத்து 500 ஆசிரியரல்லாத பணியாளர்களை, அரசு கல்லூரிகள், பாலிடெக் னிக்குகளுக்கு மாற்ற உயர்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. இதற் கான பணி மாறுதல் உத்தரவு சில தினங்களில் உயர்கல்வித் துறையால் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள பேராசிரியர்கள், ஆசிரியரல் லாத பணியாளர்களை இடமாற்றம் செய்யும்வரை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தும்படி தமிழக உயர்கல்வித்துறை அறி வுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேராசிரியர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
கடந்த 1979-ம் ஆண்டு ‘பியுசி’ கல்வித்திட்ட முறை கல்லூரிகளில் ஒழிக்கப்பட்டபோது, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் அதிகப்படியான பேராசிரியர்கள் பணியின்றி கூடுதலாக இருந் தனர். இதையறிந்த அரசு, அவர் களுக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அயல் பணி முறை யில் பணி வாய்ப்பு அளித்தது. அதன்பின், மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில், அவர்கள் மீண்டும் பணியாற்றிய கல்லூரிகளுக்கே சென்று பணியாற்றினர். இதே நிலைதான் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத் திலும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக இருக்கும் பேராசிரியர்களை வேறு கல்லூரிகளில் நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்நிலையில், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர், ஆசிரியரல்லாத பணி யிடங்களை நிரப்புவதை ஒத்தி வைக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பேராசிரியர், ஆசிரியரல்லாதோர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றிலும் இவர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.